அண்ணாமலை உண்மையாகவே ஐபிஎஸ் அதிகாரிதானா..? டிகேஎஸ் இளங்கோவன்.

உலக நாடுகளின் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 அன்று தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, டம்மி பாதுகாப்பு வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக பேசிய திமுக தலைமை கழக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் ஒரு மாநிலத்திலத்திற்கு செல்லும் போது முழுபொறுப்பும் ஒன்றிய அரசின் அதிகாரிகள் தான் ஏற்றுக்கொள்வார்கள், இது எல்லாருக்கும் தெரிந்தது என்றார்.
இந்த அடிப்படை கூட தெரியாமல் எப்படி போலிஸ் அதிகாரி ஆனார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.