திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே மணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணிதம் தற்காலிக ஆசிரியராக திருவள்ளுவரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
அவர் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் இரு மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாணவிகளின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
காவல் ஆய்வாளர் மலர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவிகளிடம் கணித ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுது.
இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.