“எம்மா சும்மா உக்காரும்மா” – கோபம் அடைந்த அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அமைச்சர் பொன்முடி, பொதுமக்களின் குறைகள் கேட்டறிந்தார். அப்போது, பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது எனவும், 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அமைச்சர் பொன்முடி, பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறி, நைசாக அங்கிருந்து நழுவினார். மேலும், கிராம சபைக் கூட்டம் முழுமையாக முடிவதற்கு முன்னே, அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News