”கவர்ச்சி நாயகி படத்தில் கிளுகிளுப்பு” கலகலப்பாக பேசிய ஜிபி முத்து..!

ஆர்.யுவன் இயக்கத்தில், கவர்ச்சி நாயகி சன்னி லியோன் நடிப்பில் உருவாவுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். சன்னி லியோன் முதன் முறையாக அறிமுகமாகும் இப்படத்தில், யோகி பாபு, ரமேஷ் திலக், தர்ஷா குப்தா, டிக்டாக் புகழ் ஜிபி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நாளை ரிலீஸாகவுள்ள இப்படத்தின், செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜி.பி.முத்து, இது எனக்கு முதல் படமென்றும், இதில் நல்ல கதாப்பாத்திரம் கிடைத்துள்ளது என்றும் பேசினார்.

மேலும் இப்படத்தில் நல்ல கிளுகிளுப்பு உள்ளது என கலகலப்பாக பேசி அரங்கத்தில் ஒரே சிரிப்பலை எற்படுத்தினார்.