கொடிய விஷத்தன்மை கொண்ட தேள்களுடன் கொஞ்ஜி விளையாடும் மக்கள்…!

கர்நாடக மாநிலம், யத்கீர் பகுதியில் உள்ள கிராமம் கண்டகூர்.. இங்குள்ள “செலினா பேட்டை” என்ற மலையின் மீது கொண்டம்மை கோவில் அமைந்துள்ளது.

நாக பஞ்ஜமி அன்று இந்த கோயிலில் உள்ள தேள் வடிவம் பொறிக்கப்பட்ட சிலைக்கு சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் வழிபடுவார்கள். காரணம், இதே மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான தேள்கள் இருக்கிறதாம்.

இந்த தேள்களை இந்த நாக பஞ்சமி தினத்தில்தான் பார்க்க முடியும்… மற்ற நாட்களில் அவைகள் பாறைகளுக்குள்ளேயே பதுங்கி கொள்ளுமாம். எப்போவாவது ஒன்றிரண்டு வெளியே வந்துவிட்டு மறுபடியும் உள்ளே போய் பதுங்கி கொள்ளுமாம்.

வருடத்துக்கு ஒருமுறை மட்டும், அதுவும் கோயிலில் வழிபாடு நடக்கும்போது மட்டும் இந்த தேள்கள் வெளியே கிளம்பி வருமாம்.. அந்த தேளுடன் மக்கள் அனைவரும் விளையாடுவார்கள், கொடிய விஷத்தன்மை கொண்ட தேளும் அவர்களோடு விளையாடுமாம்.

இதுவரை ஒருவரை கூட அந்த தேள் கடித்தது இல்லை என கூறுகின்றனர். மக்களுடன் சேர்ந்து தேள்களும் மலையேறும். மலையேறி “செலினா பேட்டா” மலை உச்சியை அடையும் வரை, தேள் கடவுளை பக்தர்கள் புகழ்ந்து பாடிக் கொண்டே செல்வார்கள். பிறகு பாலை ஊற்றி தேள் கடவுளுக்கு அபிஷேகம் செய்து பூஜையும் செய்து முடிப்பார்கள்.

இந்த மலை ஈரமான சிவப்பு மற்றும் மணல் மண்ணால் மூடப்பட்டிருக்கும்.. இது தேள்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான காலநிலையாக இருந்து வருகிறது.

ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வரும் நாகபஞ்சமி அன்று மலை முழுவதும் சிவந்த தேள்களால் நிரம்பி வழியும்.இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.