துணிவு கன்ஃபார்ம் ஹிட்டு தான்! காரணம் இதுதான்!

எச்.வினோத், அஜித் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைபடத்தின் திரைக்கதையில் அஜித் தலையிட்டதாகவும், இதனால் தான் படம் பெருமளவில் சொதப்பியதாகவும், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரபல யுடுயூப் சேனலுக்கு, பத்திரிக்கையாளர் அந்தனன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், துணிவு திரைப்படம், 100 சதவீதம் எச்.வினோத்தின் படமாக உருவாகி வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால், இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு, எச்.வினோத் இயக்கத்தில் உருவான, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.