“நம்ம ஊர் பொறுக்கிங்க” – ஆவேசம் அடைந்த பாடகி சின்மயி!

பிரபல பாடகி சின்மயி-க்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால், அவரது கர்ப்பகால புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தால், இவரும், நயன்தாராவை போன்றே, வாடகைத் தாய் முறையில், குழந்தைப் பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்த சின்மயி, தனது கர்ப்பகால புகைப்படத்தையும், இரட்டை குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தையும், பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

இதற்கிடையே, நெட்டிசன் ஒருவர், வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்று கூறியிருந்தார். இதனால் கடும் கோபமடைந்த சின்மயி, நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். பொறுக்கித்தனம் அவர்களது ரத்தத்திலேயே ஊறியது, வளர்ப்பும் அப்படி ஆவேசமாக கூறியுள்ளார்.