பள்ளியில் விஷ வாயு கசிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பள்ளியில் விஷ வாயு கசிந்த விவகாரத்தில் 9 மாணவர்கள் மீண்டும் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று செப்டிக் டாங்க் கசிந்து விஷவாயு பரவியதில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்கு அனுமதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீடு திரும்பினர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் 9 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.