பாதை மாறிய ‘எஸ்.எஸ்.எல்.வி,-டி1’ ராக்கட்…! பயனற்று போன செயற்கைக்கோள்கள்…!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து, முதலாவது எஸ்.எஸ்.எல்.வி., – டி1 ராக்கெட், ‘இ.ஓ.எஸ்., – 02, ஆசாதிசாட்’ என்ற, இரு செயற்கைக்கோள்களையும் சுமந்தபடி, நேற்று காலை 9:18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இதற்கான, 6.52 மணி நேர, ‘கவுன்ட் டவுண்’ நேற்று அதிகாலை, 2:26 மணிக்கு துவங்கியது. பூமியில் இருந்து புறப்பட்ட, 12வது நிமிடத்தில், எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் மூன்று நிலைகளும் திட்டமிட்டபடி விண்ணில் பிரிந்தன.

இறுதியாக, வி.டி.எம்., கருவி உதவியுடன் இரு செயற்கைக்கோள்களும், புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக, தகவல் பலகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில், செயற்கைக் கோள்களில் இருந்து தகவல் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானது.

எதிர்பார்த்தபடியே அனைத்து நிலைகளிலும், ராக்கெட் சிறப்பாக செயல்பட்டது. இறுதியில் ‘சென்சார்’ செயலிழப்பால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News