பிறந்த நாள் வாழ்த்துகள்… டிவிட்டரில் மடல் எழுதிய கமல்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமாக இருப்பவர் பத்மஸ்ரீ கமல்ஹாசன். இவரது 68-வது பிறந்த நாள் விழா நேற்று நாடுமுழுவதும் கொண்டாப்பட்டது.

இவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். இவர்களுக்கு நன்றி கூறும் வகையில் ட்வீட் செய்துள்ள கமல், பரந்த வெளியில் ஆரத்தழுவ அவாவும் ஆதுரக்கை விரித்திருந்தேன். ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன. திரைக்கலைஞர்,நண்பர் என ஒவ்வொரு துளிக்கும் நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா. மனமே தருகிறேன். ஏந்திக்கொள்க என பதிவிட்டு நன்றி கூறியுள்ளார்.

இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.