“பொண்டாட்டிய கூட கொடுப்பீங்களா” – அதிர வைத்த அண்ணாமலை!

கோவை மாவட்டம் சிவானந்த காலனி பகுதியில், திமுகவை எதிர்த்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், வானதி சீனிவாசன், சிபி ராதகிருஷ்ணன் உட்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது, தொண்டர்களிடையே பேசிய அண்ணாமலை, ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். மேலும், ஆ.ராசாவை போன்றே பெரியாரின் புத்தகத்தை படித்துக் காட்டிய அண்ணாமலை, அவரது பேச்சுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

அதாவது, “நீங்கள் பேசுகின்ற அனைத்தையும் தந்தை பெரியாரின் மரண சாசான புத்தகத்தில் இருந்து பேசியதாக சொன்னீர்கள். அதே புத்தகத்தில் 21ஆம் பக்கத்தை நீங்க படிக்கல. அதுல, நாதியில்லையே.. நாதியில்லையே.. பொண்டாட்டியை தவிர என்னென்ன கொடுக்கிறான். அவனுக்கு ஓட்டுதான் பெரிது. இன்னும் கொஞ்ச நாள் போனா பொண்டாட்டியை கூட கூட்டி
கொடுப்பான் என பெரியார் சொல்லி இருக்கிறார்.

இதை நான் சொல்லவில்லை பெரியார்தான் சொன்னார் என்று பஞ்ச்சாக பேசியிருக்கிறார். ஆ.ராசாவை போன்றே பேசி அவருக்கு அண்ணாமலை கொடுத்திருக்கும் வீடியோ, வைரலாக பரவி வருகிறது.