முட்டாள் தனத்தின் உச்சியில் அஜித் ரசிகர்! அதிர்ச்சி சம்பவம்!

வலிமை படத்தின் அப்டேட் கேட்டு, அஜித் ரசிகர்கள் பல்வேறு வில்லங்கமான செயல்களில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி முதல் வானதி ஸ்ரீனிவாசன் வரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடமும், வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர்.

ஒருவழியாக அந்த படம் வெளியாகி, அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. தற்போது, துணிவு படத்தின் அப்டேட் கேட்டு, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர், ஒருபடி மேலே சென்று, மோசமான முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதாவது, AK 61 UPDATE என்று தனது கைகளில் பிளேடால் கீறி, அஜித் படத்தின் அப்டேட் கேட்டுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்களில், இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அஜித் தனது ரசிகர்களை கண்டிக்க மாட்டாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.