ரஜினியை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன பாலசந்தர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே.பாலசந்தர். இவர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில், செருப்பால் அடிப்பேன் என்று பாலசந்தர் தன்னை திட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, ஒரு திரைப்படத்தின் ஷீட்டிங்கிற்காக, ரஜினியை பாலசந்தர் அழைத்துள்ளார்.

அப்போது, ரஜினி மது அருந்தி இருந்ததால், ஷீட்டிங்கிற்கு செல்ல பயந்துள்ளார். இருப்பினும், குருநாதர் அழைத்துவிட்டதால், குளித்து முடித்துவிட்டு, வாயில் ஸ்ப்ரே அடித்துவிட்டு, ஷீட்டிங்கிற்கு சென்றுள்ளார்.

ஆனால், ரஜினி மது அருந்தியதை கண்டுபிடித்த பாலசந்தர், “உன்னை விட பெரிய நடிகர் நாகேஷே, மது அருந்தியதால் தான் தொலைந்து போய்விட்டார். இனிமேல் மது அருந்தினால் செருப்பால் அடிப்பேன்” என்று எச்சரித்துள்ளார்.

அதன்பிறகு, ரஜினி மது அருந்துவதை நிறுத்திவிட்டாராம். இந்த விஷயம் குறித்து, ரஜினியே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.