ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த வாரிசு!

பீஸ்ட் படத்திற்கு பிறகு, தளபதி விஜய், வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு, தமன் இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படம், வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், ரிலீசுக்கு முன்பே, வாரிசு திரைப்படம் பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதாவது, வாரிசு படத்தின் ஆடியோ ரைட்ஸ், ரூபாய் 10 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் திரைவாழ்க்கையில் இந்த திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் தான் அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.