வாரிசு பட சிக்கல் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!

தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படம், பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் விழாக்காலங்களில் தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை, வாரிசு உள்ளிட்ட டப்பிங் படங்களை வெளியிடத் தடை விதித்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது.

இதற்கு பல்வேறு தமிழ் திரை பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் விஜய் தனது பண்ணை வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சந்திக்கவுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இச்சம்பவம் தற்போது திரைவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.