7,581 கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளது – RBI

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, புதிய 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த 2023-ஆம் ஆண்டு, மே 19-ஆம் தேதி அன்று, புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, திரும்ப பெற்றுக் கொள்வதாக, இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

அந்த சமயத்தில், 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 2023-ஆம் ஆண்டு, மே 19-ஆம் தேதியில் இருந்து தற்போது வரை, 97.87 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள 2.13 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், இன்னும் பெறப்படவில்லை என்றும், அந்த நோட்டுக்களின் மதிப்பு, 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் என்றும், ஆர்.பி.ஐ-யின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மே 19-ஆம் தேதி அன்று, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று RBI கூறியிருந்தது. மேலும், அனைத்து வங்கிகளிலும், இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக, அக்டோபர் 7-ஆம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டது.

வங்கிகள் மட்டுமின்றி, நாடு முழுவதும் 19 அலுவலகங்கள் திறக்கப்பட்டு, அந்த அலுவலகத்திலும், பணத்தை திரும்ப அளிக்கலாம் என்று கூறப்பட்டது. இவ்வாறு, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News