கனடா நாட்டில் உள்ள வான்கவர் பகுதியில், ரெக் என்ற கடற்கரை உள்ளது. நிர்வாண கடற்கரை என்ற கலாச்சாரம் இந்த பகுதியில் தான், முதன்முறையாக உருவாக்கப்பட்டிருந்தது.
1970-களில் இருந்து, இந்த கலாச்சாரம் இப்பகுதியில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும், இந்த கலாச்சாரம் அந்த கடற்கரையில் ஆரம்பிக்கபட உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த சில கசப்பான சம்பவங்களால், தங்களது பாதுகாப்பு குறித்து அங்கு செல்லும் பயணிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, அப்பகுதி உள்ளூர் மக்கள், தங்களது Reddit சமூக வலைதளப் பக்கத்தில், பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பான பதிவு ஒன்றில், “இனிமேல், அந்த கடற்கரை பகுதிக்கு, என்னுடைய காதலி போகவே விரும்ப மாட்டால். ஏனென்றால், நாங்கள் கடந்த முறை அங்கு சென்றபோது, ஆடை அணிந்துக் கொண்டிருந்த சில இந்திய ஆண்கள், அங்கிருந்த பெண்களை துருதுருவென பார்த்துக் கொண்டே இருந்தார்கள்” என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
“பார்த்துக் கொண்டே இருந்தது மட்டுமின்றி, பலபேர் அதனை வீடியோவாக பதிவு செய்தனர். தனியாகவும், நிர்வாணமாகவும் இருந்த சில பெண்களை, ஒருசிலர் இடிக்கவும் செய்தனர்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பதிவான இன்னொரு பதிவில், “நிர்வாணமாக இருக்கும் பெண்களை, பார்த்து ஆண்கள் மகிழ்ச்சி அடைவது என்பது சரியான விஷயம் அல்ல. இதனை நான் எதிர்பார்க்கவும் இல்லை” என்று கூறியுள்ளார். இவ்வாறு நெட்டிசன்கள் கூறியிருப்பதாக, TIMES NOW என்ற இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.