தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் .இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பன்மொழி படங்களில் நடிக்கவிருப்பதையடுத்து ,பல மொழிகள் சார்ந்த விளம்பர காட்சிகளிலும் நடித்து அசத்தி வருகிறார்.
இதனைத்தொடர்ந்து மாரிசெல்வராஜ்ஜின் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அவர் இணைத்து நடித்துள்ள மாமன்னன் படம் வெளியாக உள்ளது .
இந்தநிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் உடன் இணைந்து,பிரபல வங்கியின் விளம்பர காட்சிகளில் ஆக்ஷன் முறையில் ,ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு நடித்து அசத்தியுள்ளார். இதில் ஆக்ஷன் காட்சியில் மிரட்டும் கீர்த்தியின் வீடியோவானது சமூகவலைதலங்களில் ஆக்ஷனில் கீர்த்தி என்னும் ஹாஸ்டாக் மூலம் வைரலாகி வருகிறது .