பிரபாஸ் நடித்து இறுதியாக வெளிவந்த சாஹு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மீண்டும் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் இருவரும் இணைத்து நடித்து கடந்த 16 ஆம் தேதி அன்று வெளியான திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக கொண்டு இப்படத்தை ஓம் ராவத் இயக்கியிருந்தார் .
ஆரம்பக்கட்டத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம், வெளியான பிறகு பொதுமக்களிடையே மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது .
இருந்தபோதிலும் ஆதி புருஷ் திரைப்படத்தின் வசூல் எண்ணிக்கை வெளியாகியுள்ளது .அந்தவகையில் திரைப்படம் வெளியாகி 6 நாட்களே ஆன நிலையில் 410 கோடியை வசூல் செய்திருக்கிறது .
இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி மகிழ்கின்றனர்.மேலும் ,பிரபாஸ் ரசிகர்களும் ஆதிபுருஷ் ரசிகர்களும் போஸ்டரை சேர் செய்து வைரலாக்கி வருகின்றனர் .