இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் விரைவில் அதிகாரவபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்.
இந்த நிலையில் அவருக்கு கீழ் பணிபுரிய உள்ள பயிற்சியாளர்கள் குழுவை தேர்வு செய்ய பிசிசிஐ கெளதம் கம்பீருக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கௌதம் கம்பீர் ஒரு பேட்ஸ்மேன் என்பதால் பயிற்சியாளர்கள் குழுவில் பேட்டிங் பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.