காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கோரைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பள்ளியில் மீஞ்சூரைச் சேர்ந்த இளஞ்செழியன் (50) அறிவியல் பாடப்பிரிவில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இளஞ்செழியன் நேற்று முன்தினம் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளஞ்செழியனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர், அவரை போக்சோ மீது வழக்குப் பதிவு செய்து மருத்துவமனை அழைத்துச் சென்றனர். மேலும் இன்று, மாலை சிறையில் அடைக்க உள்ளனர்.