தமிழகத்தில் இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு!

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மத்திய அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் தேசிய நல்லாசிரியர் விருதுக்காக நாடு முழுவதும் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதிலிருந்து தகுதியான 50 பேர் விருதுக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரப் பட்டியலை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

தமிழகத்தைச் சேர்ந்த 2 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

தேர்வானவர்களுக்கு செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News