தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சசிக்குமார்.இறுதியாக இவர் நடித்து வெளிவந்த அயோத்தி திரைப்படமானது மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றது.இதனைத்தொடர்ந்து புதியதாக நடிகர் சசிகுமார் ஆர் டி எம் தயாரிப்பில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது .
மேலும் ,காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நவீன் சந்திரா ஆகியோரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் , இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் ,இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததையடுத்து, இதை வெளிப்படுத்தும் வகையில் சமூகவலைத்தளங்களில் படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.