பாரம்பரிய மருத்துவத்தின் வளமான வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது: WHO தலைவர்!

யோகா உள்ளிட்ட ஆயுர்வேதம் மூலம் பாரம்பரிய மருத்துவத்தின் வளமான வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உலக சுகாதார அமைப்பின் சர்வதேச பாரம்பரிய மருத்துவம் தொடர்பான மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:

யோகா உள்ளிட்ட ஆயுர்வேதம் மூலம் பாரம்பரிய மருத்துவத்தின் வளமான வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. இவை, வலியைக் குறைப்பதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

தொற்று அல்லாத நோய்கள், மனநலம் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பாரம்பரிய மருத்துவத்தை பல நாடுகள் நாடுகின்றன. இந்த மருத்துவ முறை, மனிதர்களின் நலனுக்கு போதுமான பங்களிப்பை செய்துள்ளது. ஒட்டு மொத்தத்திற்கான ஆரோக்கியத்திற்கான மகத்தான ஆற்றலை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

RELATED ARTICLES

Recent News