ரஷ்யாவின் உயரிய விருது வாங்கிய பிரதமர்! புகழ்ந்து தள்ளிய பாஜக தலைவர் வி.டி.ஷர்மா!

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, அவருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் மேம்பாட்டுக்கு, மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியதற்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டே, பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது தான் அவர் அந்த விருதை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி, இத்தகைய உயரிய விருதை பெற்றிருப்பது குறித்து, மத்திய பிரதேச பாஜகவின் தலைவர் வி.டி.ஷர்மா பேசியுள்ளார். அதாவது, பிரபல செய்தி ஊடகமான ஏ.என்.ஐ.-க்கு, வி.டி.சர்மா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் பேசியது பின்வருமாறு:-

“பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்தியாவின் மரியாதையும், கௌரவமும் உலக அரங்கில் உயர்ந்திருப்பது, நாட்டுக்கு ஒரு நல்ல சகுனம்.

பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய பயணத்தின்போது, அவருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. நாம் பிரதமரை வாழ்த்த வேண்டும். இது 140 கோடி மக்களுக்குமான கௌரவம்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News