உத்திர பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் விஜயகுமார் என்ற இளைஞர், கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார்.இதையடுத்து மீரட் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏராளமான ஸ்பூன்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விஜயகுமாருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடித்தனர்.
3-மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள்,அவரின் வயிற்றிலிருந்து சுமார் 63-தலையில்லா ஸ்பூன்களை அகற்றினர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போதை ஒழிப்பு மையத்தில் இருந்த போது, என்னை கட்டாயப்படுத்தி ஸ்பூன்களை உட்கொள்ள வைத்ததாக, மருத்துவர்களிடம் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.