Connect with us

Raj News Tamil

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு – அதிமுக நோட்டீஸ்!

அரசியல்

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு – அதிமுக நோட்டீஸ்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.

இந்நிலையில் எம்ஜிஆரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியதாகவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வெங்கடேசன் சார்பில் வழக்கறிஞர் ராஜசெல்வன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எம்ஜிஆர் குறித்து ஆ. ராசா பேசியது அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் இடையே மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தனது செயலுக்கு திமுக எம்.பி ஆ.ராசா வருத்தமும், மன்னிப்பும் கேட்க வேண்டும், மேலும் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். நோட்டீஸ்க்கு பதிலளிக்காத நிலையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top