போட்டியின்றி தேர்வான 10 பாஜக வேட்பாளர்கள்!

அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வாகியுள்ளனர்.

மக்களவை தேர்தலுடன் சேர்த்து அருணாசலபிரதேசம், சிக்கிம், ஆந்திரா, ஒடிசா ஆகிய 4 மாநிலங்களின் சட்டபேரவைக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் அருணாசலபிரதேசம் 60 பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் 32 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 2) எண்ணப்பட்டு வருகிறது.

முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சௌனா மெயின் உள்பட 10 பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் பவன் குமார் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 6 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News