ராஜஸ்தானில், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள், நேற்று இரவு ஆய்வு நடத்துவதற்காக சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் லிஃப்டில் செல்லும்போது, அதன் கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், 15 அரசு அதிகாரிகள் சுரங்கத்தின் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், அவர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சுரங்கத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட 15 பேரில், 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.
இதுகுறித்து பாஜகவின் எம்.எல்.ஏ தர்ம்பால் குர்ஜர் பேசும்போது, “தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் ஹரியானா மாநிலத்திற்கு சென்றிருந்தேன். ஆனால், இந்த விபத்து குறித்து அறிந்த பிறகு, உடனே இங்கு வந்துவிட்டேன். நான் அங்கிருந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டேன்” என்று கூறினார்.
மேலும், “6-ல் 7 வரையிலான ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” என்றும், அனைவரும் பாதுகாப்பான முறையில் மீட்கப்படுவார்கள் என்றும், அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் லால் சர்மா, இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து செல்வதற்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மீட்புப் பணியினை வேகப்படுத்துவதற்கும், சாத்தியமுள்ள உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும், விரைவில் குணமாக வேண்டும் என்றும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்றும், இறைவனிடம் நான் பிரார்த்திக் கொண்டேன்” என லால் சர்முா கூறியுள்ளார்.