தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த சிலர் அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக அதிமுகவிற்கு பாஜகவிற்கு இடையே மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் பாஜகவின் செங்கல்பட்டு மாவட்ட துணைத்தலைவி கங்காதேவி சங்கர் உட்பட பாஜக பெண் நிர்வாகிகள் 100 பேர் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்தனர்.
பாஜகவில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை தலைமைக்கு கொண்டு சென்றாலும் அண்ணாமலை அதை சரியாகக் கவனிக்காததன் காரணமாகவே பாஜகவில் இருந்து வெளியில் வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.