குஜராத் மாநிலம் கேடா பகுதியில் ஸ்ரீ சுவாமிநாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டப்பட்டு, இரண்ட நூற்றாண்டுகள் ஆகியுள்ளது.
இதனையொட்டி, இன்று அக்கோவிலில் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் கிலோ அளவிலான மாங்காய்கள், நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மலைபோல் கோவிலில் குவிந்துக் கிடக்கும் இந்த மாங்காய்களை பார்ப்பதற்கு, மக்கள் கூட்டம் கூட்டமாக, அந்த கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த திருவிழாவுக்கு பிறகு, நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட இந்த மாங்காய்கள், முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், மாற்றுத்திறனாளிகள் வாழும் இல்லம் ஆகியவற்றிற்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.