சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிகளில் விளையாடும் போது அல்லது படிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்கோட்டில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. ஸ்ரீ சயனா என்ற மாணவி புலப்பட்டாவில் உள்ள எம்என்கேஎம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். 135 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் அடங்கிய 150 பேர் கொண்ட குழு மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளது.
பள்ளி சுற்றுலாவுக்கு சென்ற மாணவி நேற்றிரவு மைசூர் அரண்மனைக்குச் சென்று திரும்பியபோது, ஸ்ரீ சயனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மாணவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சுற்றுலா சென்ற இடத்தில் மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.