விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. 11 மணி நிலவரப்படி வாக்கு சதவீதம் என்ன?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில், திமுகவின் வேட்பாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ-வாக பதவி வகித்து வந்தார். இவர், உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதியில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்கு பதிவு, தற்போது நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, தற்போது வரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், 11 மணி நேர நிலவரப்படி, எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 29.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

திமுகவுக்கு இந்த தேர்தல் வெற்றி கட்டாயம்:-

இந்த தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், திமுக வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அதற்கு காரணம் என்னவென்றால், கள்ளச்சாராய விவகாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை, எதிர்கட்சிகள் சுமத்தி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டின் விளைவாக, திமுக தோல்வி அடைந்தால், இது 2026 சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது.

எனவே, மக்கள் மத்தியில், தங்களுக்கு இன்னும் ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News