திருப்பூர் அருகே, ஒரே நாளில் 11 பேரை வெறி நாய் கடித்து குதறிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் வெறிநாய்கள், அப்பகுதி வழியாக செல்வோரை கடித்து குதறுவதை வழக்கமாக கொண்டுள்ளன.
அந்த வகையில், இன்று ஒரே நாளில், 11 பேரை வெறி நாய் ஒன்று கடித்து குதறியுள்ளது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை அறிந்த மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்களை கடித்த வெறி நாயை, இன்று பிடித்தனர். மேலும், சாலையில் சுற்றித் திரியும் மற்ற தெரு நாய்களையும் பிடிக்க, முயற்சிகள் நடந்து வருகிறது.