Connect with us

Raj News Tamil

காட்டுத்தீயில் சிக்கி 112 பேர் உயிரிழப்பு… 100 மாயம்…!

உலகம்

காட்டுத்தீயில் சிக்கி 112 பேர் உயிரிழப்பு… 100 மாயம்…!

தென்அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை சிலியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 92 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் குடியிருப்பு பகுதியிலும் தீ பரவி சுமார் 1,100 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. 26,000 ஏக்கர் நிலங்களும் தீயில் எரிந்து சேதமாயின.

தீயை அணைக்க தீயணைப்பு மற்றும் ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனா். இந்த விபத்தில் இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். வெப்பநிலை மிகவும் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

More in உலகம்

To Top