பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களான கோதுமை, அரிசி கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கராச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மக்களுக்கு இலவசமாக கோதுமை வழங்கியது. இதை வாங்குவதற்காக அப்பகுதி மக்கள் சமயத்தில் குவிந்தனர். நூற்றக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டு பலர் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர்.
மயங்கியவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.