கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1200 மரங்கள் நடும் விழா தொடங்கியது

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 3ம் மைல் சங்கர் காலனி பகுதியில் 1200 மரங்கள் நடும் விழா நடைபெற்றது

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை துவங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து 1200 மரக்கன்றுகளும் நடப்பட்டது. மேலும் தூய்மையான தூத்துக்குடி என்ற விழிப்புணர்வு உறுதிமொழியும் கனிமொழி எம்பி தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநகர செயலாளர் ஆனந்த் சேகரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உதவியாளர் பிரபாகர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

Recent News