கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டன்மேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன், அங்குள்ள பள்ளி ஒன்றில், 12-ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த மாணவன், வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, விசாரணை நடத்தியதில், அந்த சிறுவன், வீடியோ கேமுக்கு அடிமையாகி இருந்தது தெரியவந்தது.
புதுப்புது கேம்களை இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து, விளையாடி வருவதை அவர் வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில், புதிய கேம் ஒன்றை, இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்துள்ளார். அந்த கேமின் படி, பல்வேறு டாஸ்குகள், நிஜ வாழக்கையில் அந்த மாணவனுக்கு வழங்கப்பட்டது.
அது அனைத்தையும் அவன் செய்து வந்துள்ளான். இறுதியில், தற்கொலை செய்துக் கொள்ளும்படியும், அதனை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதனையும் ஏற்றுக் கொண்டு, கடையில் தூக்கிட்டு அவன் தற்கொலை செய்துக் கொண்டான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.