மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மீதான வரி 21 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 13 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் நடுத்தர வர்க்கத்தினர் மின்சார வாகனத்தை அதிகம் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறித்து எதுவும் இடம்பெறவில்லை என்பது பொதுமக்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.