9- மாதங்களில் 1,300 போதை பொருட்கள் பறிமுதல்!

நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 11 ஆயிரத்து 300 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நடப்பு ஆண்டின் 9 மாதங்களில் 11 ஆயிரத்து 300 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஆயிரத்து 780 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 240 போதை பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் கோக்கைன், மெபிடிரோன், கஞ்சா மற்றும் எல்.எஸ்.டி. வகை போதை பொருட்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு உள்ளன. எனினும், இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு விவரங்கள் எதனையும் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடவில்லை.