மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியபோது கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.