பெரம்பலூர் மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு, 14 வயதில் ரோஹித் ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், ரோஹித் ராஜ், தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு, மிட்டாய் வாங்குவதற்காக சென்றுள்ளான்.
அப்போது, அங்கு வந்த போதை ஆசாமிகள், அந்த சிறுவனை பிடித்து வைத்து மிரட்டியுள்ளனர். மேலும், தங்களது கையில் இருந்த மதுபாட்டில்களை உடைத்து, சிறுவனின் கழுத்தை அறுத்துள்ளனர்.
இதில், பெரும் காயம் அடைந்த சிறுவன், நடுரோட்டில் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனை கொலை செய்த போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.