மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் மலையில், இஸ்லாமியர்கள் சிலர் ஆட்டை பலியிட்டதாக கூறி சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையை தொடர்ந்து, போராட்டம் நடத்தப் போவதாக, இந்து அமைப்பினர் சிலர் அறிவித்திருந்தனர்.
மேலும், இந்த போராட்டங்களில், தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் பரவி வந்தது. இதுமட்டுமின்றி, இஸ்லாமிய மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர், தங்களது சமூக வலைதளப் பக்கத்தில், பரபரப்பான கருத்துக்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில், இரவு 12 மணி வரை, போராட்டங்கள், கூட்டங்கள், தர்ணாக்களுக்கு 144 தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.