தலைஞாயிறு கிராமத்தில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரது புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்த முற்பட்ட போது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கலவரம் வெடித்தது.

இந்நிலையில் இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அவரின் உருவப்படம் வைத்து, மரியாதை செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என விசிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

today tamil news

இதனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தலைஞாயிறு கிராமத்தில் மதகடி பகுதியில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவை மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா பிறப்பித்துள்ளார். இந்த பகுதிகளில் புதியதாக சிலைகள், பேனர்கள், கொடிக் கம்பங்கள் நடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.