டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், ஓய்வூதியம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் பேர் நாளை டெல்லி நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், சண்டிகர், பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள், டெல்லி-நொய்டா எல்லையில் திரண்டு போராட்டம் நடத்த உள்ளனர்.

விவசாயிகளின் இந்த பேரணியை தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

டெல்லி எல்லை பகுதியில் கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. செல்போன் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News