15 நிமிட காட்சி.. ஒரே டேக்.. அசத்திய சூர்யா 44 படக்குழு!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூர்யா 44’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

அந்தக் காட்சியில் வசனம், பாடல், சண்டை என அனைத்து அம்சங்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தக் காட்சி சரியாக வந்தப் பிறகு சூர்யாவுக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

RELATED ARTICLES

Recent News