சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பூபேஷ் பகேல் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “சத்தீஸ்கர் மாநிலத்தின் மகளிர் சக்திக்காக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘சத்தீஸ்கர் கிரஹ லட்சுமி திட்டத்தை தொடங்குவோம். இத்திட்டத்தின்கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.