நேபாளத்தில் திங்கள் கிழமை ஏற்பட்ட நிலநடுத்தில் 153 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: நேபாளத்தின் ஜாஜா்கோட் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மீண்டும் திங்கள்கிழமை ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.8 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, 4.5 ரிக்டா் அளவுகொண்ட பின்னதிர்வும் ஏற்பட்டது.
தலைநகா் காத்மாண்டு வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இதே ஜாஜா்கோட் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் 157 போ் உயிரிழந்ததாக முன்னா் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்தவா்களின் பட்டியலில் சிலரது பெயா்கள் இரண்டு முறை இடம் பெற்றது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கையை அதிகாரிகள் 153-ஆக திங்கள்கிழமை குறைத்தனா்.