சிக்கிம் மாநிலம் வடக்கில் ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் 3 வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.