கண்புரை அறுவை சிகிச்சை.. பார்வை இழந்த 16 நோயாளிகள்.. அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம்..

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மெடியாபுரோஸ் உயர் சிறப்பு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு, 16 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு, தங்களது கண் பார்வை மோசம் அடைந்திருப்பதாக, 16 நோயாளிகளும் கூறியுள்ளனர். சில நோயாளிகள், சரியாக பார்ப்பதற்கே அவதி அடைவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, பரிசோதித்து பார்த்ததில், அவர்களது கண்களில், தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், இந்த தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விவரங்கள், தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவம், சுகாதாரத்துறையில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை தொடர்பான கூடுதல் தகவல்கள்:-

கண்புரை அறுவை சிகிச்சை செய்து, 4 நாட்களுக்கு பிறகு தான் இந்த தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே, மருத்துவமனைக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களால், இந்த தொற்று ஏற்பட்டிருந்தால், அதற்கான அறிகுறிகள் 3 வாரங்களுக்கு பிறகு தான் தெரியவந்திருக்கும்.

ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில், தொற்று ஏற்பட்டதை வைத்து பார்க்கும்போது, அறுவை சிகிச்சை நடந்தபோது தான், தவறு நடந்திருக்கும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகம், கடந்த வெள்ளிக் கிழமை மதியம், மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த மீட்டிங்கில், மாநிலம் முழுவதும் உள்ள 104 கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். மேலும், தேசிய கண் பார்வையின்மை ஒழிப்பு திட்டத்தின் உறுப்பினர்கள், கண் பார்வையியல், நுண்ணுயிரியல் துறையின் தலைவர்கள் ஆகியோரும், இந்த மீட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News